எகிப்து அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து
2022-07-23 16:12:21

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுலை 23ஆம் நாள் எகிப்தின் 70ஆவது தேசிய விழாவை ஒட்டி அந்நாட்டு அரசுத் தலைவர் சேசிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இவ்வாழ்த்து செய்தியில்,

இரு நாட்டுறவு வளர்ச்சியில் உயர்வாக கவனம் செலுத்தி வருகின்றேன். சேசியுடன் இணைந்து, ஒருவருக்கு ஒருவர் உறுதியுடன் ஆதரவு அளிப்பது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் கூட்டு கட்டுமானத்தை முன்னேற்றுவது, உலக வளர்ச்சி முன்மொழிவின் நடைமுறையாக்கத்தில்  ஒத்துழைப்பு மேற்கொண்டு, வளரும் நாடுகளின் பொது நலன்களைப் பேணிக்காப்பது ஆகியவற்றுக்குப் பாடுபட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.