அமெரிக்காவின் சில்லுகள் மசோதா தனக்கு தானே விதித்த தடை
2022-07-23 16:57:34

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவையில் சில்லுகள் மசோதா, நடைமுறை வாக்களிப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால், செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவையில் இம்மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும், இம்மசோதாவின்படி, அமெரிக்காவின் அரை மின் கடத்தித் துறையில் மானியம் பெற்றுள்ள நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய தடை விதிக்கப்படும்.

இம்மசோதாவின் இலக்கு சீனா என்பது தெளிவாக உள்ளது. வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் கரீன் கூறுகையில், சீனாவின் முதலீட்டு வளர்ச்சி வேகத்தைக் குறைப்பதற்கு மசோதாவிலுள்ள விதிகள் துணைபுரியும் என்று தெரிவித்தார். சீனாவை அடக்குவது பற்றிய இந்த வெளிப்படைக் கூற்று, அமெரிக்காவின் மேலாதிக்கச் சிந்தனையை மீண்டும் பிரதிபலிக்கிறது.

சில்லு தொழில் உலகமயமாக்கத் தொழில்களில் ஒன்றாகும். இதற்கு பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பு தேவை. அமெரிக்காவின் செயல் சந்தை விதிமுறையை மீறி, உலகளாவிய தொழில் சங்கிலியின் நிலைத்தன்மையைப் பாதித்துள்ளது.

அரசியல் தலையீடு சந்தை விதிமுறையைத் தடுக்க முடியாது. அறிவியல் தொழில் நுட்பத் தொடர்பைத் துண்டிப்பது, சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது. மாறாக, அமெரிக்கா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மட்டும் அதிகரிக்கும்.