இளைஞர்கள் வேலை வாய்ப்புக் கருத்தரங்கு
2022-07-23 19:11:19

உலக இளைஞர் வளர்ச்சி மன்றக் கூட்டத்தின் போது, வேலை வாய்ப்பு பெறுவது மற்றும் தொழில் புரிவது என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஜூலை 22ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சர்வதேச அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த 10க்கும் மேலான சீன மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சுமார் 300 இளைஞர் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கில் பங்கெடுத்தனர்.

ஐ.நாவின் மக்கள் தொகை நிதியத்தின் சீனாவுக்கான பிரதிநிதி காங் ஜியாயூ கூறுகையில், தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்கு, இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவது மற்றும் தொழில் புரிவது மிகவும் முக்கியமானது. சரியான ஆதரவு மற்று நல்ல சூழ்நிலையின் மூலம் இளைஞர்கள் தங்களது உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொண்டு வர முடியும் என்றார்.

மேலும், சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சீன மனித வளம் மற்றும் சமூகக் காப்புறுதி துறையின் துணை அமைச்சர் யூ ஜியாதொங் பல்வேறு தரப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.