5வது டிஜிட்டல் சீனா உச்சி மாநாடு துவக்கம்
2022-07-23 16:01:51

5வது டிஜிட்டல் சீனா உச்சி மாநாடு ஜூலை 23ஆம் நாள் ஃபூசோ நகரில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், பரப்புரைத் துறை தலைவருமான ஹுவாங் குன்மிங் காணொலி வழியாக துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங்கின் இணைய வளர்ச்சி பற்றிய முக்கியக் கருத்தை ஆழமாகக் கற்றுக்கொண்டு செயல்படுத்தி, சீனாவில் எண்ணியல் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். எண்ணியல் மயமாக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் வரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய அறைக்கூவல்களைச் சமாளித்து, புதிய மேம்பாடுகளை உருவாக்க வேண்டும் என்றார்.