கடலில் மாசுபட்ட நீரை வெளியேற்றும் ஜப்பானிடம் இழப்பீடு கோரப்பட வேண்டும்
2022-07-23 16:05:45

ஜப்பானின் அணு ஆற்றல் ஒழுங்கு ஆணையம் ஜுலை 22ஆம் நாள் நடத்திய கூட்டத்தில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் மாசுபட்ட நீரை கடலில் வெளியேற்றுவது தொடர்பான டோக்கியோ மின்னாற்றல் நிறுவனத்தின் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டது. தவறான திட்டத்தை உண்மையாக மாற்ற முயலும் ஜப்பானின் ஆபத்தான நடவடிக்கையும், ஒழுக்கக்கேடான செயலும் இதுவாகும்.

கடலுக்குள் அணு விபத்தில் மாசுபட்ட நீரை மனிதகுலம் இதுவரை ஒருபோதும் வெளியேற்றவில்லை. அறிவியலுக்கு ஏற்பில்லா மற்றும் பொறுப்பற்ற இச்செயலின் பின்விளைவு யாருக்கும் தெரியாது. இந்த மாசுபட்ட நீர் கையாளப்பட்ட பிறகே கடலில் வெளியேற்றப்படும் என ஜப்பான் கூறிய போதிலும், இந்நீரிலுள்ள கதிரியக்கப் பொருட்கள் முற்றிலும் அகற்றுவது மிகவும் கடினம் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மாசுபட்ட நீரிலுள்ள ட்ரிடியும்(tritium) எனும் அணுக்கருவைத் தூய்மைப்படுத்தும் தொழில் நுட்பத்தை டோக்கியோ மின்னாற்றல் நிறுவனம் கடந்த ஆண்டில் வெளிப்படையாகக் கேட்டுக் கொண்டது. மாசுபட்ட நீரைத் தூய்மைப்படுத்தும் நம்பத்தக்க பாதுகாப்பான தொழில் நுட்பத்தை ஜப்பான் கொண்டிருக்கவில்லை என்பதை இது காட்டியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கும் கடல் சுற்றுச்சூழ்லைப் பாதுகாக்கும் கடமை உண்டு. பல்வேறு நாடுகளும் சர்வதேச சட்டத்தின்படி பொறுப்பேற்க வேண்டும். ஜப்பானின் செயலால் 10 ஆண்டுகளுக்குப் பின் உலகளாவிய கடற்பரப்பில் பாதிப்படையும் நிலையில், சர்வதேச சமூகம் சட்டப்படி அதனை பொறுப்பேற்கச் செய்து இழப்பீடு கோர வேண்டும்.