அல்பேனிய புதிய அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
2022-07-24 16:29:39

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், ஜுலை 24ஆம் நாள், அல்பேனிய அரசுத் தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட பாஜ்ராம் பெகாய்க்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

இரு நாடுகள், ஆழமான பாரம்பரிய நட்புறவைக் கொண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகள், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையில் கூட்டு கட்டுமானத்தையும், சீனா-மத்திய கிழக்கு ஐரோப்ப நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பையும் மேடையாகக் கொண்டு, அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, கொள்கை தொடர்பை அதிகரித்து வருகின்றன. பெகாயுடன் இணைந்து, இரு நாடுகளின் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பை ஆழமாக்கி, இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை தர முயற்சி செய்ய விரும்புகிறேன் என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.