அமெரிக்காவில் வெப்பநிலை உயர்வால் 19 பேர் சாவு
2022-07-24 16:27:31

அமெரிக்காவின் ஃபாக்ஸ் செய்தி நிறுவனம் ஜூலை 23ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவின் பல இடங்களில் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.

மேலும், தேசிய வானிலைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, அந்நாட்டின் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த சில இடங்களில் ஜூலையில் அதிகபட்சமாக 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியுள்ளது. அந்நாட்டின் பெரும் பகுதி உயர் வெப்பத்தின் அபாயத்தில் உள்ளதை இது காட்டுகிறது.