எண்ணியல் பொருளாதாரம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு
2022-07-24 16:25:12

உலக இளைஞர் வளர்ச்சி மன்றக் கூட்டத்தின் போது, எண்ணியல் பொருளாதாரம் என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஜூலை 23ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த நிபுணர்கள், அறிஞர்கள், இளைஞர் பிரதிநிதிகள் முதலியோர் இக்கருத்தரங்கில் பங்கெடுத்தனர்.

சீனா, இந்தியா, வங்காளத்தேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில் புரியும் இளைஞர்கள், மருத்துவ ஆரோக்கியம், உயிரினச் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் எண்ணியல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்கு எண்ணியல் பொருளாதாரத்தின் பங்கு என்பது குறித்து, சீன மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோர்களும் பொருளியலாளர்களும் உரையாடல் நடத்தினர்.