சீன-இந்தோனேசிய அரசுத் தலைவர் விரைவில் சந்திப்பு
2022-07-24 19:54:35

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, இந்தோனேசிய அரசுத் தலைவர் சோகோ, ஜுலை 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பிறகு சீனாவில் பயணம் மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு அரசுத் தலைவர் இவர் ஆவார். நெடுநோக்கு தன்மை வாய்ந்த இரு நாட்டுறவை இது வெளிகாட்டுகிறது. அத்துடன், இச்சந்திப்பு. சீன-இந்தோனேசிய பொது சமூக ஆக்கப்பணிக்கு புதிய ஆற்றலை ஊட்டும்.

கடந்த சில ஆண்டுகளில் இரு நாடுகளின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு இடைவிடாமல் ஆழமாகி வருகின்றது. இக்காலத்தில், 21ஆவது நூற்றாண்டு கடல் வழி பட்டுப்பாதை முன்மொழிவு, பன்துங் எழுச்சி, ஜகார்தா-பன்துங் உயர் வேக இருப்புப்பாதை, ஆர்சிஇபி உடன்படிக்கை ஆகியவை, இரு நாட்டுறவு வளர்ச்சியின் முக்கிய சாதனைகளாகும். இவை இரு நாட்டு தொடர்பின் அடிப்படையாகவும் திகழ்வது குறிப்பிடத்தக்கது.