தரவு வெளியீட்டில் உலகின் 2ஆவது இடம் பிடித்துள்ள சீனா
2022-07-24 17:02:04

2021ஆம் ஆண்டு டிஜிட்டல் சீனா வளர்ச்சி பற்றிய அறிக்கையை சீன இணையவெளி நிர்வாகம் 23ஆம் நாள் 5ஆவது டிஜிட்டல் சீனா உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் வெளியிட்டதோடு, 2022ஆம் ஆண்டு சீன மக்களின் டிஜிட்டல் அறிவு மற்றும் தொழில் நுட்ப உயர்வு மாதம் என்ற நிகழ்ச்சியையும் தொடங்கியது.

2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை சீனாவின் தரவு வெளியீட்டு அளவு 2.3 ஸிகா பைட் முதல் 6.6 ஸிகா பைட்டாக உயர்ந்துள்ளது. 2021ஆம் ஆண்டிற்கான இந்த அளவு உலகளவில் 9.9 விழுக்காடும், 2ஆவது இடமும் வகித்தது. மேலும், உலகளவில் தொழில் நுட்ப மேம்பாடுடைய மிகப் பெரிய இணைய உள்கட்டமைப்பு சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இறுதிவரை, சீனாவில் 14 லட்சத்து 25 ஆயிரம் 5ஜி அடித்தள நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இது உலகளவில் 60 விழுக்காட்டுக்கு மேலாகும். 5ஜி பயனர்களின் எண்ணிக்கை 35.5 கோடியாகும். அனைத்து கிராமங்களும் அகண்ட அலைவரிசை சேவையில் இணைக்கப்பட்டுள்ளன. தவிரவும், சீனாவின் தொழிற்துறை இணையம் 45 தேசியப் பொருளாதார வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு வணிக அலுவல் தொகை 2017ஆம் ஆண்டில் இருந்த 29 லட்சம் கோடி யுவானிலிருந்து 2021ஆம் ஆண்டில் 42 லட்சம் கோடி யுவானாக அதிகரித்துள்ளது என்று டிஜிட்டல் சீனா வளர்ச்சி பற்றிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.