நேபாளத்தில் சுற்றுலாத்துறை மீட்சிக்கு செயல்திட்டம் வெளியீடு
2022-07-25 11:07:28

கொவைட்-19 தொற்றுநோய் பரவலால் முடங்கிப்போன நேபாளத்தின் சுற்றுலாத் துறையை மீட்கும் விதம் புதிய செயல்திட்டத்தை அந்நாட்டு அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. இச்செயல்திட்டத்தில், 2023 முதல் 2033 வரையிலான நேபாளத்தில் 10 ஆண்டு பயணம் உள்ளிட்ட புதிய நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

சுற்றுலா மறுமலர்ச்சி செயல்திட்டத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜீவன் ராம் ஷ்ரீஸ்தா வெளியிட்டார். இதன்படி, சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில் பரப்புரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், யோகாவுடன் கூடிய ஆன்மீகச் சுற்றுலா, கண்காட்சிகள், கூட்டங்கள், உள்ளிட்டவையும் முன்னெடுக்கப்பட உள்ளன.

அடுத்த மூன்று மாதங்களுக்குள், நேபாளத்தில் 10 ஆண்டு பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்படும் என்று செயல்திட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 10 ஆண்டு பயணம் திட்டத்தில் எவ்வித இலக்கும் இன்னும் நிர்ணியிக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும் சுற்றுலாத் துறை செயலாளர் ஹோம் பிரசாத் லுய்டெல் தெரிவித்தார்.

நேபாளத்துக்கு, அன்னிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கியத் துறையாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாகவும் சுற்றுலா இருந்து வருகிறது.