ஜூன் மாதம் சிங்கப்பூரின் பணவீக்க விகிதத்தில் புதிய உச்சம்
2022-07-25 16:57:04

ஜூன் மாதத்தில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 6.7விழுக்காடாகும். மையப் பணவீக்க விகிதம் 4.4விழுக்காட்டை எட்டி 2008ஆம் ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சேவைத் துறை, உணவுப் பொருட்கள், சில்லறைப் பொருட்கள், மின் மற்றும் எரிவாயு கட்டணம் முதலியற்றின் விலை உயர்வு மிகவும் அதிகம் என்று 25ஆம் நாள் சிங்கப்பூர் நிதி நிர்வாக ஆணையமும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரியவந்துள்ளது.