அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துப்பாகிச்சூடு சம்பவம்
2022-07-25 17:15:55

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள ஒரு பூங்காவில் ஜூலை 24ஆம் நாள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதில் குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமுற்றனர்.

உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இச்சம்பவம் நடந்த போது, வாகனக் கண்காட்சி, பேஸ்பால் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இப்பூங்காவில் நடைபெற்று கொண்டிருந்தது.

இதுவரை, இச்சம்பவத்தின் காரணம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.