எரிபொருள் விநியோக க்யூஆர் நடைமுறை தாமதம் – இலங்கை
2022-07-25 15:11:21

இலங்கையில் எரிபொருள் விநியோகத்துக்கான க்யூஆர் குறியீடு நடைமுறையை செயல்படுத்துவது தாமதமாகும் என்று அந்நாட்டு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

தேசிய அளவிலான க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தி எரிபொருள் நிலையங்கள் திங்கள்கிழமை முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில எரிவாயு நிலையங்களில் எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பயன்படுத்தலாம் என்று தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பு தெரிவித்துள்ளது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் இயக்குநர் ஹெகோடா கூறுகையில், “க்யூஆர் குறியீடு முறை சில நாள்களுக்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். தற்போது, முன்மாதிரித் திட்டமாக கொழும்புவில் மட்டும் இந்நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில், 25 மாவட்டங்களில் இது அறிமுகப்படுத்தப்படும்,” என்றார்.

இலங்கையில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறைக்கு மத்தியில், இருசக்கர வாகனசாரிகளுக்கு வாராந்திர முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்ளும் விதம் எரிபொருள் அனுமதிச் சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.