ஜப்பானில் சகுராஜிமா எரிமலை வெடிப்பு
2022-07-25 18:32:38

ஜப்பான் வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டின் காகோஷிமாவிலுள்ள சகுராஜிமா எரிமலை ஜூலை 24ஆம் நாளிரவு பெருமளவில் வெடித்தது. உச்ச நிலை எச்சரிக்கையை ஜப்பான் வானிலை மையம் வெளியிட்டு, சுற்றுப்புற மக்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.