வென்டியன் ஆய்வகக் கலம் தியான்ஹே மையக் கலத்துடன் இணைப்பு
2022-07-25 09:56:21

சீனா 24ம் நாள் செலுத்திய வென்டியன் ஆய்வகக் கலம், ஜூலை 25ஆம் நாள் அதிகாலை 3:13 மணிக்கு தியான்ஹே மையக் கலத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இணைப்புக்கான செயல்முறை சுமார் 13 மணி நேரம் நீடித்தது.

பணித் திட்டத்தின் படி, ஷென்ஜோ 14 விண்வெளி வீரர் குழுவினர் வென்டியன் ஆய்வகக் கலத்துக்குள் நுழைவார்கள்.