பிரிட்டனின் பார்வையில் பயங்கரவாத எதிர்ப்பை விட சீனாவை எதிர்ப்பது மேலும் முக்கியமா?
2022-07-26 11:22:21

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஆஸ்பென் பாதுகாப்பு கருத்தரங்கு, அண்மையில், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ஆஸ்பென் நகரில் நடைபெற்றது. சீனாவுக்கு எதிரான தப்பு எண்ணங்கள் ஏன் அவதூறுகள் கூட இக்கருத்தரங்கில் வெளியிடப்பட்டன.

பிரிட்டன் இரகசிய உளவு நிறுவனத் தலைவர் ரிச்சர்ட் மூர் இக்கருத்தரங்கில் கூறுகையில்,

எங்கள் உளவுக் கடமையில் சீனாவே முதன்மை. இதன் முக்கியத்துவம் பயங்கரவாத எதிர்ப்பை தாண்டியுள்ளது என்றார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஐ.நாவின் 25 அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் சீனா பங்கெடுத்து, சுமார் 50 ஆயிரம் படைவீரர்களை அனுப்பியுள்ளது. ஐ.நா பாதுகாப்பவை நிரந்தர உறுப்பு நாடுகளில் மிக அதிகமான ராணுவ வீரர்களை அனுப்பிய சீனா, அமைதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் முக்கியமான ஆற்றலாகப் போற்றப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் பல முறை நிகழ்ந்தன. இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் மக்கள் சொந்த நாட்டின் உளவுத்துறை அதிகாரி தெரிவித்த அபத்தான கருத்தைக் கேட்ட பிறகு, அவர்களின் மனதில் எத்தகைய உணர்வு ஏற்படும்?