2ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்கள் பொருட்காட்சி தொடக்கம்
2022-07-26 10:45:08

2ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்கள் பொருட்காட்சி ஜுலை 25ஆம் நாள் ஹெ நன் மாநிலத்தின் தலைநகர் ஹெ கொவில் துவங்கியது.

மொத்தம் ஒரு இலட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய காட்சி மண்டலத்தில், சர்வதேசக் காட்சி இட அளவு 80ஆயிரம் சதர மீட்டரை எட்டியது. 61 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1600க்கும் மேலான வணிகச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நடப்பு பொருட்காட்சியின் பிரதம விருந்தினர் நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.

மேலும், சீனாவின் தயாரிப்புகள் சர்வதேச சந்தையை விரிப்படுத்துவதற்கு இப்பொருட்காட்சி முக்கிய வழி அளிக்கிறது. நாடளவில் 1200க்கும் அதிகமான வணிக சின்னங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.