இயற்கை எரிவாயுத் தேவை குறைப்பு
2022-07-27 10:26:00

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் 26ஆம் நாள் அரசியல் உடன்படிக்கை ஒன்றை எட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தின் எரியாற்றல் வினியோகப் பாதுகாப்பை உயர்த்தும் வகையில், இவ்வாண்டின் குளிர்காலத்தில் இயற்கை எரிவாயுத் தேவையை 15 விழுக்காடு குறைக்கத் தன்னார்வமாக நடவடிக்கை மேற்கொள்ள உடன்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கையின் படி, 2022ஆம் ஆண்டின் ஆகஸ்ட் முதல் நாள் தொடக்கம், 2023ஆம் ஆண்டின் மார்ச் 31ஆம் நாள் வரை, இந்த நாடுகளின் இயற்கை எரிவாயு தேவை, கடந்த 5 ஆண்டுகளின் சராசரி நுகர்வின் படி 15 விழுக்காடு குறைக்கப்படும்.

மேலும் அப்போது இயற்கை எரிவாயு விநியோகப் பற்றாக்குறை உள்ளிட்ட நிலைமைகள் ஏற்பட்டால், இயற்கை எரிவாயு தேவையை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் கட்டாய நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.