மத்திய கிழக்கு அமைதிப் போக்கிற்கு சீனா வேண்டுகோள்
2022-07-27 10:51:59

அரசியல் முறையில் பாலஸ்தீனப் பிரச்சினைக்குப் பயனுள்ள தீர்வு காணும் வகையில், மேலும் பெருமளவில் மேலதிக தாக்கமுள்ள சர்வதேசக் கூட்டம் நடத்தி, அதில் கலந்து கொள்ள, ஐ.நா பாதுகாப்பவையின் உறுப்பு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு அமைதி போக்குடன் தொடர்புடைய அனைத்து தரப்புகளையும் அழைக்க வேண்டும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தரத் துணை பிரதிநிதி கேங் ஷுவாங் 26ஆம் நாள் தெரிவித்தார்.

பாலஸ்தீனப் பிரச்சினை குறித்து அன்று நடைபெற்ற வெளிப்படை விவாதத்தில் அவர் கூறுகையில், தற்போது மத்திய கிழக்கு அமைதி போக்கு தேக்க நிலையில் சிக்கியுள்ளது. இப்பிரச்சினை குறித்த ஐ.நாவின் தீர்மானம் நடைமுறையில் வராமல் இருப்பதற்கு, சீனா கவலை தெரிவித்தது. பாலஸ்தீனப் பிரச்சினை, மத்திய கிழக்கு பிரச்சினையின் மைய அம்சம். சர்வதேச சமூகம், சிக்கலான நிலைமையை முழுமையாக அறிந்து கொண்டு, உடனே பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து, இப்பிரச்சினைக்கான தீர்வு முறையை, சரியான பாதைக்கு முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.