பிலிப்பைன்ஸில் கடும் நிலநடுக்கம்
2022-07-27 16:50:47

பிலிப்பைன்ஸ் நாட்டின் அப்ரா மாகாணத்தில் புதன்கிழமை காலை ரிக்டர் அளவில் 7ஆகப் பதிவான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் 27ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் உறுதி செய்தார்.

தலைநகர் மணிலா உள்பட லுசோன் தீவின் பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.  அப்ரா மாகாணத்தின் சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. பல சாலைகளில் போக்குவரத்து தற்காலிமாக நிறுத்தப்பட்டது.