இணைந்து செயல்பட்டு கூட்டு வெற்றி பெறும் சீன – இந்தோனேசிய உறவு
2022-07-27 19:15:08

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இந்தோனேசிய அரசுத் தலைவர் ஜோக்கோ விதோதோவுடனான பேச்சுவார்த்தையில் நிறைய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இதில், பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தைக் உருவாக்குவதன் முக்கிய திசையை இரு தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. தடுப்பூசி மற்றும் மரபணுக் கூட்டு ஆய்வு, பசுமைசார் வளர்ச்சி, தகவல் பரிமாற்றம் மற்றும் சட்ட அமலாக்கம், இணைய பாதுகாப்புத் திறன் மேம்பாடு, கடல்சார் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளிலும் ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தானது. இப்பேச்சுவார்த்தை,  இரு தரப்புக்கு வெற்றி தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட சமூகத்தைக் கூட்டாக  உருவாக்குவதன் முக்கிய திசையை உறுதிப்படுத்தியது என்பது, விதோவிதோவின் இப்பயணத்தில் மிகவும் முக்கியமான அரசியல் சாதனையாகும். இது, இரு நாடுகளுக்கும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறது.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்னெடுப்பு, இரு நாடுகள் கூட்டு வளர்ச்சியை நனவாக்குவதற்கான திறவுகோலாகும். மேலதிக முன்னேற்றங்களைப் பெறும் விதம், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பின் உயர் தரமான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்ற வேண்டுமென ஷிச்சின்பிங் வளியுறுத்தினார். 

பாலி தீவில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டுக்கு இந்தோனேசியா தலைமைத் தாங்குவதற்கு முழு ஆதரவளிப்பதாகவும் ஷிச்சின்பிங் பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்தினார். சீனாவின் உறுதியான ஆதரவு இந்தோனேசியா இவ்வுச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு நம்பிக்கையையும் உந்து ஆற்றலையும் கொண்டு வருகிறது. மேலும், நடப்புப் பேச்சுவார்த்தையில், பகிரப்பட்ட எதிர்காலச் சமூகம், ஒன்றொன்று நன்மை மற்றும் கூட்டு வெற்றி முதலிய சொற்களைப் பயன்படுத்தி, அரசுத் தலைவர் ஜோக்கோ விதோவிதோ சீன-இந்தோனேசிய உறவை விவரித்தார். அமைதி மற்றும் வளர்ச்சியை நாடுவது தான் ஆசிய மக்களின் விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பு ஆகும் என்று இப்பயணமானது  போதுமாக எடுத்துக்காட்டுகிறது.