இலங்கை புதிய தலைமையமைச்சருக்கு லீ கெச்சியாங் வாழ்த்துச் செய்தி
2022-07-27 17:12:03

இலங்கை தலைமை அமைச்சராகப் பதவியேற்ற தினேஷ் குணவர்த்தனேவுக்கு சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 26ஆம் நாள் செவ்வாய்கிழமை வாழ்த்து செய்தியை அனுப்பினார்.

லீ கெச்சியாங் கூறுகையில், சீனாவும் இலங்கையும் நட்பார்ந்த அண்டை நாடுகள் மற்றும் நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகும். இரு நாட்டுத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 65 ஆண்டுகளில், இரு தரப்புகளும் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை மேம்படுத்தி, ஒத்துழைப்புகளை மேற்கொண்டு, இன்னல்கள் மற்றும் அறைக்கூவல்களை இணைந்து சமாளித்துள்ளன. சீன-இலங்கை நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கு சீனா உறுதியாக ஆதரவு அளிக்கிறது. இயன்ற அளவில் இலங்கை மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு மற்றும் உதவியளிக்க சீனா விரும்புகிறது என்றார்.