கடந்த வாரத்தில் ஜப்பானில் மிக அதிக கரோனா பாதிப்பு
2022-07-28 19:21:00

உலக சுகாதார அமைப்பு ஜூலை 27ஆம் நாள் வெளியிட் தகவலின்படி, ஜூலை 24ஆம் நாள் முடிவிலான ஒரு வாரத்தில் ஜப்பானில் கரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9லட்சத்து 69ஆயிரத்தைத் தாண்டியது. ஒரு வார கணக்கின்படி, உலகளவில் புதிதாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. BA.5ரக ஓமிக்ரான் திரிபு ஜப்பானில் 7ஆவது அலையை ஏற்படுத்தியது.