ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
2022-07-28 19:28:58

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாஹியான் ஜூலை 27ஆம் நாள் கூறுகையில், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினைக்கான பன்முக உடன்படிக்கையை மீண்டும் நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தையை முன்னேற்றம் பெறும் வகையில் தூதாண்மை மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் முன்னெடுப்பதை ஈரான் வரவேற்கிறது என்றார்.

மேலும், தீர்வு வழிமுறையை அமெரிக்கா பயனுள்ள முறையில் கண்டால், இந்த உடன்படிக்கையை மீண்டும் நிறைவேற்றுவது குறித்து பல்வேறு தரப்புகள் ஒத்த கருத்தை எட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.