அமெரிக்காவில் மொத்தம் 4600 குரங்கம்மை பாதிப்புகள்
2022-07-28 14:51:05

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 27ஆம் நாள் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, அந்நாட்டில் மொத்தம் 4639 குரங்கம்மை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. உலகளவில் குரங்கம்மை பாதிப்புகளில் அமெரிக்கா முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க், கலிஃபோனியா, இல்லினோய்ஸ் ஆகியவை, அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்புகள் அதிகமாக ஏற்பட்டுள்ள மூன்று மாநிலங்களாகும்.

சோதனைகளின் அதிகரிப்பு, நோய் பாதிப்புகளை அறிவிக்கும் முறைமையின் மேம்பாடு மற்றும் வைரஸின் தொடர்ச்சியான பரவலுடன், அமெரிக்காவில் குரங்கம்மை பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று இம்மையத்தின் இயக்குநர் அண்மையில் தெரிவித்தார்.