அமெரிக்க வட்டி விகிதம் பெருமளவில் அதிகரிப்பு
2022-07-28 16:48:25

அமெரிக்க வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து,  2.35 முதல் 2.5 விழுக்காடு வரையாக உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி ஜூலை 27ஆம் நாள் அறிவித்தது. இவ்வாண்டில் 4வது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, மார்ச் முதல் மே வரை அமெரிக்க நுகர்வோர் விலை குறியீட்டு எண் கடந்த ஆண்டில் இருந்ததை விட 3 திங்கள் தொடர்ச்சியாக 8 விழுக்காட்டுக்கு மேலாகும். குறிப்பாக, ஜுன் திங்கள் இந்த விகிதம் 9.1 விழுக்காடாகும். இந்த அதிகரிப்பு அளவு கடந்த 41 ஆண்டுகளில் மிக அதிகமானது.