2022இல் 150000 கிலோமீட்டர் நீளமான சாலைகள் சீனக் கிராமப்புறங்கில் கட்டியமைக்க திட்டம்
2022-07-28 16:43:04

2022ஆம் ஆண்டுக்குள் சீனாவின் கிராமப்புறங்களில் ஒரு லட்சத்து 50ஆயிரம் கிலோமீட்டர் நீளமான சாலைகள் புதிதாக கட்டியமைக்கப்படும். 8000  ஆபத்தான பாலங்களின் மறுசீரமைப்புப் பணி நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளின் மேம்பாடு மூலம் கிராமப்புற பொருளாதாரத்தின் வளர்ச்சியை முன்னெடுக்க முடியும் என்று சீனப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், போக்குவரத்து அடிப்படை வசதிகளின் கட்டுமானம் மற்றும் பராமபரிப்புத் துறையில் உள்ளூர் வாசிகளுக்கு வேலை வாய்ப்புகளை விரிவாக்குவதுடன், கிராமவாசிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இது வழிகோலும்.