தென் சீனக் கடலில் அமெரிக்காவின் செயல் தோல்வியடையும்
2022-07-29 11:56:47

அமெரிக்காவிலிருந்து வெகுதொலைவிலுள்ள சீனாவுக்கு அருகே தனது போர்க்கப்பலை அனுப்பி ஆத்திரமூட்டியதோடு, தற்காப்புக்காக சீனா மேற்கொண்ட நியாயமான நடவடிக்கை முரட்டுத்தனமானது என்றும் அவதூறு பரப்பியது. இது, கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்கா தென் சீனக் கடலில் தீய நோக்கத்துடன் மேற்கொண்ட சூழ்ச்சியாகும்.

இப்பிரதேசத்துக்கு அப்பாலுள்ள அமெரிக்கா பல ஆண்டுகளாக சுதந்திரக் கப்பல் போக்குவரத்து என்ற சாக்குப்போக்கில் தென் சீனக் கடலில் தனது படைப்பலத்தை வெளிக்காட்டுவது என்பது, தென் சீனக் கடலில் இராணுவமயமாக்கலை தூண்டும் மிகப்பெரிய காரணியாகும். குறிப்பாக, அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா முத்தரப்பு கூட்டுறவு கடந்த ஆண்டில் நிறுவப்பட்ட பிறகு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் அமெரிக்கா தனது இராணுவத்தள அமைப்பை அதிகரித்து, கடற்படையின் அணு ஆற்றல் பற்றிய இரகசியமான தகவல்களை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இதனால், தென் சீனக் கடல் எதிர்நோக்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.

தென் சீனக் கடலிலும் ஆசிய பிரதேசத்திலும் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, குழப்பத்தை ஏற்படுத்தி வரும் அமெரிக்கா தான் திகழ்கிறது என்று இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் அனைத்தும் தெரிந்து கொண்டுள்ளன.

மேலும், இந்தோனேசிய அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது, கடல் சார் பல்வேறு துறைகளின் பரிமாற்றத்தை வலுப்படுத்த இருதரப்பும் தீர்மானித்துள்ளன. ஆசியான் அமைப்பின் தலைவர் என கருத்தப்படும் இந்தோனேசியாவின் நிலைப்பாடு, தென் சீனக் கடலிலுள்ள நாடுகளின் பொது கருத்தை ஓரளவில் வெளிப்படுத்தியுள்ளது. தற்போது இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் தென் சீனக் கடல் பிரச்சினையின் தீர்வுக்கான முன்முயற்சி மற்றும் ஆணை உரிமையைக் கொண்டுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா தென் சீனக் கடலில் எவ்வாறு செயல்பட்டாலும் பயன் பெற முடியாது.