அமெரிக்காவின் ஜிடிபி மதிப்பு தொடர்ச்சி வீழ்ச்சி
2022-07-29 17:31:18

அமெரிக்க வணிக அமைச்சகம் ஜூலை 28ஆம் நாள் வெளியிட்ட முன் மதிபீட்டுத் தரவுகளின்படி, இவ்வாண்டின் 2வது காலாண்டில் அமெரிக்க மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 0.9 விழுக்காடு குறைந்தது. இந்த மதிப்பு முதல் காலாண்டில் 1.6 விழுக்காடு குறைந்தது. இந்நிலையில், இவ்வாண்டு அமெரிக்க மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 2 காலாண்டுகள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வாண்டில், அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. பண வீக்கம் உயர்ந்து வருவதுடன் நுகர்வோரின் நுகர்வு திறன் பெரிதும் குறைந்துள்ளது. அமெரிக்க வணிக அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2வது காலாண்டில் அந்நாட்டின் தனிப்பட்ட நுகர்வு விலைக் குறியீடு எண் 7.1 விழுக்காடு அதிகரிதது.