அமெரிக்கா வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்:சீனா
2022-07-30 16:54:03

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் ஜுலை 28ஆம் நாளிரவு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது, ஷிச்சின்பிங், சீன மற்றும் அமெரிக்காவின் கடப்பாடுகளை விளக்கிக் கூறினார். சர்ச்சைகளை உரிய முறையில் கட்டுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்த பைடன், தைவான் சுதந்திரத்துக்கு ஆதரவு அளிக்காது என்று மீண்டும் வலியுறுத்தினார்.

தைவான் பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு பற்றி முக்கியமாக எடுத்துரைப்பது, இப்பிரதேசத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அமெரிக்காவின் ஆத்திரமூட்டல் செயல்களால், இடர்ப்பாடுகள் அதிகரித்து வருவதை வெளிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், இந்தத் தொடர்பு நேர்மையாகவும் ஆழமாகவும் உள்ளது என்று இரு நாட்டு அரசுத் தலைவர்களும் கருத்தினர். தொடர்ந்து தொடர்பு கொள்ள சம்மதித்தனர். சீன-அமெரிக்க உறவு தேக்க நிலையில் சிக்கியுள்ள போதிலும், இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் சர்ச்சைகளைக் கட்டுப்படுத்த விரும்புகின்றன. அண்மையில் டாக்டர் கிசிங்கர் பேட்டியளிக்கையில், அமெரிக்கா சீனாவுடன் முடிவற்ற பகைமை கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டார். இப்பகுத்தறிவான கருத்தை, அமெரிக்க ஆட்சியாளர்கள் கேட்டறிய வேண்டும்.