சீன மற்றும போலந்து அரசுத் தலைவர்களின் தொடர்பு
2022-07-30 16:53:14

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் பிற்பகல் போலந்து அரசுத் தலைவர் துடாவுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

கொள்கைத் தொடர்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உயர் தராகவும் கூட்டாகவும் கட்டியமைக்க வேண்டும். இரு நாட்டு உறவின் ஒட்டுமொத்த நிலைமையைப் போலந்து ஆக்கப்பூர்வமாகப் பேணிகாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் விருப்பம் தெரிவித்தார்.

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்-சீனா ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய-சீனா உறவுகளின் வளர்ச்சியைத் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற போலந்து விரும்புகின்றது என்று துடா தெரிவித்தார்.

உக்ரேன் நெருக்கடி குறித்தும் இரு நாடுகளின் அரசுத் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.