அமெரிக்க-ரஷிய வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
2022-07-30 17:20:37

அமெரிக்கத் தரப்பின் கோரிக்கையின்படி, ரஷிய வெளியுறவு அமைச்சர் லாப்ரோப், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனுடன் 29ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு மேற்கொண்டதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் தெரிவித்தது.

இதில் உக்ரேன் பிரச்சினை பற்றி குறிப்பிட்ட போது, ரஷியா சிறப்பு ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் கோட்பாட்டு ரீதியான நிலைப்பாட்டை ராப்ரோப் விவரித்தார். ரஷியா தனது கடமையையும் இலக்கையும் நிறைவேற்றும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், புவியமைவு அரசியலைக் கருத்தில் கொண்டு உணவுத் தானியப் பிரச்சினையைப் பயன்படுத்தும் மேலை நாடுகளின் செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கருங்கடல் துறைமுகம் வழியாக வேளாண் உற்பத்திப் பொருட்களை வெளியேற்றுவது குறித்து உக்ரேன், துருக்கி மற்றும் ஐ.நாவுடன் எட்டியுள்ள உடன்படிக்கையை ரஷியா நிறைவேற்ற வேண்டும் என்று ராப்ரோவிடம் வலியுறுத்தியுள்ளதாக பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.