சீன மற்றும் ஈரான் அரசுத் தலைவர்களின் தொடர்பு
2022-07-30 16:56:26

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 29ஆம் நாள் பிற்பகல் ஈரான் அரசுத் தலைவர் ரைசியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார்.

தற்போது புதிய கொந்தளிப்பான மாற்றம் காணும் காலக் கட்டத்தில் உலகம் நுழைந்துள்ளது. ஈரானுடன் இணைந்து சீன-ஈரான் பன்முக நெடுநோக்குக் கூட்டாளி உறவுக்கான புதிய முன்னேற்றங்களை மேம்படுத்த சீனா விரும்புகின்றது என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

மேலாதிக்கவாதத்தையும் ஒருதரப்புவாதத்தையும் பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் ஈரானும் சீனாவும் எதிர்த்துள்ளன. சீனாவுடன் நெருக்கமாக ஒத்துழைத்து, சர்வதேச நியாயத்தையும் நீதியையும் பேணிகாக்க ஈரான் விரும்புகின்றது என்று ரைசி தெரிவித்தார்.