சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கை குறித்து அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்களின் மனநிறைவு
2022-07-30 16:59:45

சீன சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கம் 29ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீனாவில் அந்நிய முதலீட்டின் வணிகச் சூழல் குறித்த 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையின் படி, சீனாவின் வணிகச் சூழல் மற்றும்ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகள் குறித்து அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன. வணிக வளாகங்களுக்கான அணுகுதல், வரி செலுத்துதல் மற்றும் சந்தை நுழைவு ஆகியவற்றுக்கு 90 விழுக்காட்டு அந்நிய முதலீட்டுத் தொழில் நிறுவனங்கள் மிகுந்து மனநிறைவு தெரிவித்தன.

இரண்டாவது காலாண்டில் ஆய்வில் பங்கேற்ற வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களில் 18.5 விழுக்காட்டுத் தொழில் நிறுவனங்கள் சீனாவிலான தங்கள் வணிக அளவை விரிவுபடுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.