உள்ளூர் சில்லுகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மாபெரும் சலுகை:அமெரிக்கா
2022-07-30 17:22:14

2022 ஆம் ஆண்டின் சில்லுகள் மற்றும் அறிவியல் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் அண்மையில் நிறைவேற்றியது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 29ஆம் நாள் கூறுகையில்,

உள்ளூர் சில்லுகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு மாபெரும் சலுகையை வழங்குவது, ஒரு வழக்கமான வேறுபடுத்தப்பட்ட தொழில் ஆதரவுக் கொள்கையாகும் என்று சுட்டிக்காட்டினார். இதிலுள்ள சில விதிகளின்படி தொடர்புடைய நிறுவனங்கள் சீனாவில் மேற்கொள்ளும் இயல்பான வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தடை செய்யப்படும். அதேவேளையில், சர்வதேச சந்தையில் அரை மின் கடத்திகளின் விநியோக சங்கிலியும் பாதிக்கப்படும். பன்னாட்டு வர்த்தகத் துறையில் சிக்கல்களையும் ஏற்படுத்தும். சீனா இதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளது என்று இந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.