இந்தியாவின் முதல் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தார்!
2022-07-31 18:35:05

இந்தியாவில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட  முதலாவது குரங்கம்மை நோயாலி குணமடைந்துளார். சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எதிர்மறை முடிவு வந்துள்ளது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை நான்கு பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது. அவர்களில் மூவர் கேரளாவிலும், ஒருவர் டெல்லியிலும் உள்ளனர். 

இந்தியாவின் முதலாவது தொற்று, கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் வசிக்கும் 35 வயதான ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜூலை 12 ஆம் நாள் கேரளாவிற்கு வந்தடைந்தார் மற்றும் ஜூலை 14 ஆம் நாள் குரங்கம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குரங்கம்மை வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும். இது மருத்துவரீதியில் குறைவான தீவிரம் கொண்டதாக இருந்தாலும், கடந்த காலத்தில் பெரியம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளைப் போன்றது என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.