சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் இணைய உள்கட்டமைப்பு
2022-07-31 16:39:21

2022ஆம் ஆண்டு சீன கணக்கீட்டு திறன் மாநாடு 30ஆம் நாள் ஜினன் நகரில் துவங்கியது. தற்போது சீனாவில் உலகளவில் மிகப்பெரிய மற்றும் முன்னேறிய இணைய உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இவ்வாண்டின் ஜூன் இறுதி வரை, சீனாவில் 5ஜி அடிப்படை நிலையங்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 54 ஆயிரத்தை எட்டியுள்ளது. 5ஜி செல்லுலார் தொலை பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 45 கோடியைத் தாண்டியுள்ளது. ஜிகாபிட் நேரடி ஒளியிழை இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 10 இலட்சத்தைத் தாண்டியது என்று இம்மாநாட்டிலிருந்து கிடைத்த தகவல் கூறுகின்றது.

இம்மாநாட்டின் துவக்க விழாவில் பத்துக்கும் மேற்பட்ட தேசிய தரவு மையங்கள் மற்றும் இணையத்தின் ஒருங்கிணைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதற்கான மொத்த முதலீட்டுத் தொகை, ஏறக்குறைய 5000 கோடி யுவானாகும்.