ஜுலை சீனாவின் பி எம் ஐ குறியீடு 49%
2022-07-31 16:42:28

சீனத் தேசியப் புள்ளிவிவரப் பணியகத்தின் சேவைத் துறை ஆய்வு மையம், சீன சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் ஆகியவை ஜுலை 31ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, ஜுலை திங்கள் சீன தயாரிப்புத் துறையின் கொள்வனவு மேலாளர் குறியீடு(PMI), 49 விழுக்காட்டை எட்டி, கடந்த மாதம் இருந்ததை விட 1.2 விழுக்காடு குறைந்தது. வேளாண் பொருட்களின் பதனீடு, உணவு, மது, பானம் மற்றும் தேநீர், சிறப்பு சாதனங்கள், வாகனம் முதலிய துறைகளின் பி எம் ஐ குறியீடு 52 விழுக்காட்டைத் தாண்டி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் எரியாற்றல் செலவு அதிகம் கொண்ட துறைகளின் குறியீடு குறைந்து வருவதால், ஒட்டுமொத்த பி எம் ஐ குறியீட்டு வீழ்ச்சிக்கான முக்கிய காரணியாகும் என்று கருதப்படுகிறது.