பைடனுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு
2022-07-31 16:36:07

அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பைடன் கோவிட்-19 தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருடைய மருத்துவர் ஓகான்னா 30ஆம் நாள் வெள்ளை மாளிக்கைக்கு அளித்த ஒரு குறிப்பானையில் தெரிவித்தார்.

பைடனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இதனால், சிகிச்சையின்றி அவரைத் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பைடனுக்குக் கடந்த 21ஆம் நாள் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. 27ஆம் நாள் குணமடைந்ததாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்த்து நினைவு கூரத்தக்கது.