காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் பதக்கம் வென்றது
2022-07-31 18:33:34

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் வீரர் சங்கேத் சர்கார் ஆடவருக்கான 55 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.

சர்காரின் சாதனைக்கு தலைமை அமைச்சர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "சங்கேத் சர்காரின் விதிவிலக்கான வெற்றிக்கு பாராட்டுக்கள்! அவர் மதிப்புமிக்க வெள்ளிப் பதக்கத்தை வென்றது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்" என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

சங்கேத் சர்காருக்கு நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.