ஜூன் மாதத்தில் இலங்கையின் கையிருப்பு 185 கோடி அமெரிக்க டாலர்கள்
2022-07-31 18:32:46

இவ்வண்டின் ஜூன் மாதத்தில் இலங்கையின் அதிகாரபூர்வ கையிருப்பு 185 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்ததாக இலங்கையின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில், இலங்கையின் கையிருப்பு 760 கோடி டாலர்களாக இருந்தது. ஆனால், அப்போதிலிருந்து கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும், 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் கையிருப்பு 570 கோடி டாலர்களாக குறைந்தது.

மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, இலங்கையின் கையிருப்பு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 310 கோடி  டாலர்களாகவும், 2022 ஆம் ஆண்டின் மார்ச் இறுதியில் 190 கோடி   டாலர்களாகவும் குறைந்தது.  

இலங்கையின் கையிருப்பு குறைவினால், எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது.

ஓர் ஒட்டுமொத்தப் பொருளாதாரத் திட்டத்தை வகுக்குமாறு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பல நன்கொடையாளர்கள் நிதியுதவி வழங்குவதற்கு முன், இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.