2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை மற்றும் வர்த்தகப் பொருட்காட்சி
2022-08-01 19:53:11

2022ஆம் ஆண்டு சீனச் சர்வதேசச் சேவை மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகஸ்டு 31ஆம் நாள் முதல் செப்டம்பர் 5ஆம் நாள் வரை பெய்ஜிங் தேசிய மாநாட்டு மையம் மற்றும் ஷோகாங் பூங்காவில் நடைபெறவுள்ளது. சர்வதேசப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் முக்கிய தளமாக இப்பொருட்காட்சி மாறியுள்ளது. இதில் 163 மன்றக் கூட்டங்கள் நடைபெறும். மேலும் 84 புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் அவற்றின் சாதனைகளை வெளியிடும். ஜெர்மனி, பிரிட்டன், ஜப்பான் முதலிய 25 நாடுகளும் 6 சர்வதேச அமைப்புகளும் காட்சி மேடைகளை நேரடியாக ஏற்பாடு செய்யவுள்ளது.