சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்ட 95ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்
2022-08-01 10:26:07

 

சீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்ட 95ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சீனத் தேசியப் பாதுகாப்பு அமைச்சகம் ஜுலை 31ஆம் நாள் மக்கள் மாமண்டபத்தில் விருந்து அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்களுடன் இவ்விருந்தில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவ ஆணையத்தின் உறுப்பினரும் அரசவை உறுப்பினரும் தேசியப் பாதுகாப்பு அமைச்சருமான வெய் ஃபெங்ஹே இவ்விருந்தின் துவக்கத்தில் உரை நிகழ்த்தினார். கடந்த 95 ஆண்டுகளில் சீன மக்கள் விடுதலை படை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தலைமையில், தேசத்தின் சுதந்திரம், மக்களின் விடுதலை, நாட்டின் செழுமை ஆகியவற்றுக்கு அழியா சாதனைகளைச் செய்து, நாட்டின் அரசுரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிக்காப்பதற்கு வலுவான ஆதரவளித்து, உலகின் அமைதியைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், புதிய யுகத்தின் பயணத்தில் இராணுவத்தை வலுப்படுத்துவது பற்றிய ஷிச்சின்பிங்கின் சிந்தனையை சீன இராணுவம் ஆழ்ந்த முறையில் செயல்படுத்தி, தேசியப் பாதுகாப்பு மற்றும் இராணுவப் படையின் நவீனமயமான கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.