ஆப்கானில் சீன உதவியோடு கட்டியமைக்கப்பட்ட கட்டிடத்தின் திறப்பு விழா
2022-08-01 11:01:36

ஆப்கானிஸ்தானில் சீன அரசின் உதவியோடு கட்டியமைக்கப்பட்ட  காபுல் பல்கலைக்கழகத்தின் பன்நோக்கு கல்வி கட்டிடம் மற்றும் மண்டபத்தின் திறப்பு விழா ஜுலை 31ஆம் நாள் காபுல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஆப்கானுக்கான சீன தூதர் வாங் யூ, ஆப்கான் தற்காலிக அரசின் உயர் நிலை கல்வி அமைச்சகத்தின் தற்காலிக அமைச்சர் அபுதுல் பாகி ஹகானி, காபுல் பல்கலைக்கழகத்தின் தலைவர் அசிஸ் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

சீன உதவியுடன் இக்கட்டிடம் 5 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இது இரு நாட்டு நட்புறவின் அடையாளம் என்று வாங் யூ தெரிவித்தார்.

இக்கட்டிடத்தின் ஆக்கப்பணியில் சீனா அளித்த உதவிக்கு நன்றி என்று ஹகானி தெரிவித்தார்.