குவாங்சியில் டிராகன் பழ விளைச்சல்
2022-08-01 13:00:40

இவ்வாண்டில், சீனாவின் குவாங்சி ட்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரொங்ஷுய் மியௌ இனத் தன்னாட்சி மாவட்டத்தில் டிராகன் பழங்கள் அமோக விளைச்சல் பெற்றுள்ளன. அதிகமான பயணிகள் அங்கே பழங்களைப் பறித்து, அருமையான கிராம வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், வெளியூரில் வேலை செய்த கிராமவாசி ஒருவர், டிராகன் பழங்களைப் பயிரிடும் தொழில் நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, சொந்த ஊரில் பரவல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.