2022 சர்வதேச நுகர்வு பருவம் துவக்கம்
2022-08-01 10:29:06

2022ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வு பருவம் மற்றும் ஷாங்காய் பொருள் வாங்குதல் விழாவின் துவக்க நிகழ்ச்சியும், முதலாவது சர்வதேச நுகர்வு மைய நகரங்களின் கருத்தரங்கும் ஜுலை 31ஆம் நாளிரவு ஷாங்காய் கண்காட்சி மையத்தில் நடைபெற்றன.

சீன வணிக அமைச்சகத்தின் ஏற்பாட்டில், 2022ஆம் ஆண்டு சர்வதேச நுகர்வு பருவம் என்ற நிகழ்ச்சி ஜுலை இறுதி முதல் அக்டோபர் வரை நடைபெற்று வருகின்றது. நுகர்வோரின் நம்பிக்கையை அதிகரித்து, நுகர்வின் உள்ளார்ந்த ஆற்றலை தட்டியெழுப்பும் வகையிலும், நுகர்வுத் துறையின் மீட்சி மற்றும் தர உயர்வை மேம்படுத்தி, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் வகையிலும், நாடளவில் ஒரேமாதிரியான நுகர்வு முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.