பெலோசியின் தைவான் பயணம் சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறுபடுத்தியது
2022-08-02 23:44:41

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தைவான் பணியகமும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் வெளிவிவகார ஆணையமும் 2ஆம் நாளிரவு பெலோசியின் தைவான் பயணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சீனாவின் இறையாண்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்குக் கடுமையாக ஊறுபடுத்தும் இச்செயல் மோசமான பின்விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் துறையில் இது சீனாவின் மீதான பெரும் ஆத்திரமூட்டல் நடத்தையாக கருதப்படுகின்றது.