சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத பகுதி-- தைவான்
2022-08-02 23:59:06

ஆகஸ்டு 2ஆம் நாளிரவு அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் பெலோசி சீனாவின் உறுதியான எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவானில் பயணம் துவக்கினார். இச்செயல் ஒரே சீனா என்ற கோட்பாட்டைக் கடுமையாக மீறி, சீனாவின் இறையாண்மை மற்றும்  உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்குக் கடுமையாகத் தீங்கு விளைவித்துள்ளது. சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டி அறிக்கை வெளியிட்டு இதற்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

உலகில் ஒரே ஒரு சீனா உள்ளது. தைவான், சீனாவின் உரிமை பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட முடியாத பகுதியாகும். சீன மக்கள் குடியரசின் அரசு சீனா முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கமாகும்.

ஒரே சீனா என்ற கோட்பாடு, சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான தூதாண்மை உறவுகளை நிறுவுவதற்கான முன் நிபந்தனையாகும். மேலும் இதுவும் சீன-அமெரிக்க உறவுக்கான அரசியல் அடித்தளமாகும்.

தைவான் பிரச்சினையில் சீனாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைச் சீன அரசும் மற்றும் சீன மக்களும் உறுதியாகப் பேணிகாக்கின்றனர். சீனாவின் ஒன்றிணைப்பு மற்றும் தேசிய மறுமலர்ச்சியைத் தடுக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியில் முடிவடையும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.