கென்டகி மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு
2022-08-02 09:59:47

அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் கடந்த பல நாட்களாக பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 குழந்தைகள் உள்ளிட்ட 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்று இம்மாநிலத்தின் தலைவர் ஆகஸ்டு முதல் நாள் தெரிவித்தார்.

மேலும், ஆகஸ்டு முதல் நாள் முற்பகல் வரை, இம்மாநிலத்தில் 12.5 ஆயிரம் குடும்பங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின் விநியோகம் தடைபட்டுள்ளது.